நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!! தலித்துக்கள்  பகுதி என்பதால் இந்த நிலையா? மக்களை போராட்ட தூண்டாதே!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு எண் 15 பகுதியில் விளாத்திகுளம் டு ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் தொடர்ந்து போக்குவரத்து இடையூறும் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் வகையில் குடியிருப்பு பகுதியிலும்  சாலையின் இரு புறங்களிலும் பிளாஸ்டிக் இரும்பு கழிவுகளை கொட்டி  சுகாதார சீர்கேடு செய்து வருகின்றனர் தொடர்ந்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தினரிடம்  புகார் அளித்தும்  தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் தங்கி இருக்கும் பகுதியில் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளால் மழைநீர் செல்லும் கழிவுநீர் பிளாஸ்டிக் முட்டைகளைக் கொண்டு அடைத்து வைத்துள்ளனர் மேலும்   அப்பகுதியில் உள்ள மக்கள்   டெங்கு காலரா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தொடர்ந்து இரவு நேரங்களில் பாம்புகள் கடியால் அப்பகுதியில் குழந்தைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு  நேரங்களில் சாலையை மறித்து லோடு ஏற்றுவது தினமும் விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தனி நபருக்கு ஆதரவாக பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா அல்லது தலித் மக்களின் பகுதி என்பதால் இந்த நிலையா!!தலித் மக்கள் பகுதி என்பதால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையா..? என்பதை கண்டித்து நாள் :13.1.2025 அன்று காலை10 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து போராட்டம் செய்யப் போகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் நமது தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.