விளாத்திகுளம் அருகே பேய் கோளாறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார்- குஞ்சையாபுரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் செல்வநாதன் பொன்னையா(41), இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார், இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமலும் பேய் கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது, இதனால் மனவிரத்தியில் இருந்த செல்வநாதன் பொன்னையா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.