உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, இதில் பட்டா மாறுதல்,முதியோர் உதவித்தொகை, தொழில் வரி விதிப்பு,மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வியாபாரிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 16 துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகைகள் தமிழக அரசு சார்பில் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உள்ள காடல்குடி கிராமத்தில், ராமச்சந்திராபுரம் முத்தையாபுரம், துரைசாமிபுரம், கே.சுப்பையாபுரம்,வாதாலக்கரை, காடல்குடி, லட்சுமிபுரம்,மிட்டாவடமலாபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து ஆய்வு செய்து மருத்துவக் குழுவினரிடம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.மேலும் வருவாய்துறை சார்பில் பயனாளிகளுக்கு முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், விதவைச்சான்றிதழ் மற்றும் பேரூராட்சி சார்பில் சொத்து வரி பெயர் மாற்றுதல் ஆணை, மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், சமூகப்பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் விமலா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் உட்படத்துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.