விளாத்திகுளத்தில் " நலம் காக்கும் ஸ்டாலின் " மருத்துவ முகாம்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு முகாமின் அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
மேலும் மருத்துவ முகாமிற்கு வரும் பொது மக்களிடம் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கனிவாக நடந்து கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.
இந்த முகாமில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன், பள்ளி தலைமையாசிரியர் தபசுமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சமுதாய நல செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.