விளாத்திகுளம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ வகமாலையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னமலைக்குன்று கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன விநாயகர், ஸ்ரீ வகமாலையம்மன், ஸ்ரீ பொன்னும் கருப்பசாமி கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி பூஜை, அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாகவாஜனம், கும்ப ஆவாகன பூஜை, திரவியகுதி, பூர்ணாகுதி, மகா அபிஷேகம், அலங்காரம், தூப தீப நிவேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் காலை 11 மணியளவில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து ஸ்ரீ சந்தன விநாயகர், ஸ்ரீ வகமாலையம்மன், ஸ்ரீ பொன்னும் கருப்பசாமி கேட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வருசாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதமாக அன்னதானமாக வழங்கப்பட்டது...