விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ ராமநவமி திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வசந்தம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில், ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் ஸ்ரீ ராமநவமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம், வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் என பல்வேறு பூஜைகளுடன் சாய் பாபாவிற்கு பல வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆரத்தி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள் உள்ளிட்டவற்றைக் வழங்கி சாய்பாபாவை மனம் உருகி தரிசனம் செய்தனர். ஸ்ரீ ராம நவமி திருவிழாவை முன்னிட்டு பாபாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் பக்தர்கள் பாபாவின் பாடல்களை பாடியவாறு கோவிலில் நடைபெற்ற மாலை ஆரத்தியை கண்குளிர கண்டு தரிசித்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பாபாவின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்தி சாய்பாபாவின் அருள் பெற்றுச் சென்றனர்.