பிரசித்தி பெற்ற சிந்தலக்கரை காளிபராசக்தி பீடத்தை நிறுவிய ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமிகள் இயற்கை எய்தினார்...



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை ஸ்ரீகாளிபராசக்தி தவசித்தர் பீடத்தை நிறுவியவர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள். வேலப்ப நாயக்கர்-சிலுக்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர், தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் வெக்காளியம்மன் கோவில் கட்டி பல அற்புதங்களை நிகழ்த்திய சித்தராக போற்றப்படுகிறார். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி மும்மத பிரார்த்தனைகளை நடத்தியவர்...


சித்தர்கள் வாழ்ந்த புனிதமான சிந்தலக்கரை பகுதியில், அம்மன் பாலகராக காளிபராசக்தி தவசித்தர் பீடத்தை உருவாக்கி, அம்மன் அருளோடு தவ வாழ்க்கை மேற்கொண்டார், சில ஆண்டுகளுக்கு முன்பாக எட்டையாபுரம் அருகே நரிப்பட்டி கிராமத்தில் வாராஹி அம்மன் கோவில் மற்றும் குபேரர் கோவில் கட்டி தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


வெண்கலத் தீச்சட்டி ஏந்தி வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது, மும்மத (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ) பிரார்த்தனைகளை முன்னெடுப்பது போன்ற அற்புதங்களைச் நிகழ்த்தி காட்டியவர்...