விளாத்திகுளம் அருகே வைகாசி விசாகத்தை முன்னிட்டு குழந்தை வடிவிலான அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு பல்வேறு அபிஷேக சிறப்பு பூஜைகள்!
முருகன் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியசாமி திருக்கோவிலில், குழந்தை வடிவிலான ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு பால்,தயிர், இளநீர் மஞ்சள் சந்தனம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களிலான, மாலை அணிவிக்கப்பட்டு பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாலசுப்பிரமணியர் பெயருக்கு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.