மகா சிவராத்திரியை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு 4 கால சிறப்பு பூஜை!



நாடு முழுவதும் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடு நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம் விளாத்திகுளத்தில்  அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு 4  கால பூஜைகள் செய்து தேவாரம், திருவாசகங்கள்பாடி, பால்,தயிர்,பஞ்சாமிர்தம், தேன்,நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி,விபூதி, , பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவருக்கு சுவாமிகளுக்கு யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் 108 சங்காலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி,வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அபிஷேகங்கள் செய்து,மலர்களால் நன்கு அலங்கரித்து, மகா தீபாதாரணை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து லிங்கோப்பருக்கு, சிறப்பு அபிஷேக தீபாரனை நடைபெற்றது, மகா சிவராத்திரி என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.