விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம்  கிராம தீண்டாமை சுவர் எதிர்ப்பு போராட்டக் குழுவை சந்தித்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, ஆதி திராவிட மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்நிலையில் 182 வது நாள் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக சங்கரலிங்காபுரம் கிராமத்திற்கு வருகை தந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினரும், வெளிச்சம் தொலைக்காட்சி நிறுவனருமான பனையூர்பாபு ,சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை ஏற்றிவைத்து வீரவணக்கம் செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்துதீண்டாமை சுவரை பார்வையிட்டு, கிராமத்தில் உள்ள ஆதிபகவான் புத்தர் திடலில் வைக்கப்பட்டிருந்த புத்தர், அண்ணல் அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து கிராம மக்களுடன் பனையூர்பாபு தீண்டாமை சுவருக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார், பின்னர் அவர் பேசுகையில் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவுவிடம், சங்கரலிங்கபுரம் கிராம தீண்டாமை சுவர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என உறுதியளித்தார்.


இந்நிலையில் சங்கரலிங்கபுரம் கிராமத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவிற்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும்  உற்சாக வரவேற்பளித்தனர்.



இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் முரசு தமிழப்பன்,மாவட்டச்செயலாளர் முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சடையாண்டி, வில்லாளன் ரெஸ்லின், லட்சுமிபுரம் ரமேஷ், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் எதிர்ப்பு போராட்ட குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.