விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் -  குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த தியாகராஜன் என்ற ஹென்றி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, தலைமறைவான ஆசிரியர் தியாகராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரை அலட்சியப்படுத்திய புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட்(51) மீதும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்  இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.



இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில் மாணவிகளை போராட துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதூர்  பஸ் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


புதூர் பாஜக கிழக்கு மண்டலம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை பழனிமுருகன் செய்திருந்தார், இந்நிகழ்வில் பிரஸ்தேவ்,அழகர், பாபு,பாலாஜி,அன்னபூரணி,அஷ்டலட்சுமி,கண்ணன்,உமையசெல்வம்,முருகேசன்,லட்சுமி,ரமேஷ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கந்தசாமி,பார்த்திபன்,லட்சுமணகுமார், காளியப்பன்,காட்டுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.