விளாத்திகுளம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தை இருதயராஜ் மகன் அந்தோணிஇனிகோ (40) என்பவர் கடந்த  ஜனவரி 3ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்தோணி இனி கோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அந்தோணி இனிகோவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.