தெருவில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் - மக்கள் அவதி - பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளம் கிராமத்தில் வாறுகால் சுத்தம் செய்து பல மாதங்களாகி விட்டதாகவும், இதனால் அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் முழுவதும் தெருவில் செல்லும் நிலை இருப்பது மட்டுமின்றி தேங்கி கிடக்கும் நிலை இருப்பதாகவும், அந்த கழிவு நீர் வழியாக தான் நடந்தும் செல்லும் நிலை இருப்பது மட்டுமின்றி துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் பரவும் நிலை இருப்பதாகவும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.