தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  மந்திகுளம், கே.குமாரபுரம், மார்த்தாண்டம்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  தண்ணீர்  மின்சார மோட்டார் காப்பர் வயர்கள்  தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  விருச்சம்பட்டி வைப்பாற்றுக் கரையில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருவர் காப்பர் வயர்களை திருடிக் கொண்டிருந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இருவரும், விளாத்திகுளம் பங்களா தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் வின்சென்ட்  (21) மற்றும் கீழ விளாத்திகுளம்  கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பிரதீப்  (27) ஆகியோர் ராமகிருஷ்ணனின் தோட்டத்தில் 100 மீட்டர் நீளமுள்ள   மின்மோட்டார் காப்பர் வயர்களை  திருடி எடுத்து செல்ல இருந்தது  தெரிய வந்தது, இதனை அடுத்து ரூபாய் 32 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர் மற்றும் இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பிரதீப் மற்றும் வின்சென்ட் ஆகியோரை கைது செய்து, இவர்கள் இந்த திருட்டில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளனரா அல்லது இதற்கு முன்னதாக பல்வேறு கிராமங்களில் காப்பர் வயர் திருடு போனதில் சம்பந்தப்பட்டுள்ளனர என விளாத்திகுளம்  காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.