விளாத்திகுளம் அருகே இரவில் தொடர் திருட்டு : லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் பாதுகாப்பு E- VAHAN சேவை செயலி அலுவலகத்தில் புகுந்த முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்  தூத்துக்குடி சாலையில் உள்ள வணிகவளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அதேபோல் தூத்துக்குடி சாலையில் இயங்கி வரும் இந்தியா முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான E-VAHAN  சேவை பாதுகாப்பு செயலி அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், அலுவலகத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு பெட்டங்களையும் திறந்து, அதிலிருந்த 6000 ரூபாய் பணத்தை திருடியுள்ளனர், இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடர்கள் முகமூடி இருசக்கர வாகனத்தில் வந்து இரும்பு பொருட்களால் பூட்டை உடைத்து திருடன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது, அதேபோல் நேற்று  கோவில்பட்டியில் ஒரு ஆசிரியர் வீட்டில் 25 பவுன் தங்க நகை மற்றும் பணம் 55 ஆயிரம் திருடு போனதும் குறிப்பிடத்தக்கதாகும்.