எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தை புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகை!
தூத்துக்கு மாவட்டம் எட்டையபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 08.01.2026 அன்று சர்வே எண் 24/2 ஆவண எண் 79/2026 போலி ஆவணங்களை கண்பித்து பத்திர பதிவு நடந்துள்ளது. இந்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டி புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தை புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இதில் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மாரிச்சாமி, கோவில்பட்டி நகரச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பிச்சையா, கயத்தார் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தம்பிராஜன், எட்டயபுரம் மகளிரணி செயலாளர் பாரதிராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.