விளாத்திகுளம் அருகே கைகளால் தொட்டால் கையோடு வரும் புதிய தார்சாலை: சாலையை சீரமைக்க வேண்டும்,ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்திலிருந்து அயன்ராசாபட்டி கிராமத்திற்கு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024-2025 திட்டத்தின் கீழ் 4900 மீட்டர் தூரத்திற்கு, ரூபாய் 275.42 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைக்கும் பணி ஒப்பந்தமிடப்பட்டு, கடந்தாண்டு பணிகள் முடிவடைந்தது.
இந்தநிலையில் சாலை பணிகள் 100% முடிவடைந்த நிலையில்,சாலை போடப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் சாலைகள் கையால் தொட்டாலே கையோடு வரும் நிலையில் பல இடங்களில் பெயர்ந்துள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரான திமுகவை சேர்ந்த ராஜகோபால் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி :முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்.