விளாத்திகுளம் அருகே மீண்டும் மீண்டும் வழிப்பறி:பிரபல ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தைச்சேர்ந்த சுப்பையா மகன் சுந்தர்ராஜ் (40),இவர் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை விளாத்திகுளம் அருகே உள்ள (பட்டியூர்) குமரட்டையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் மகன் ரமேஷ்குமார்(35) என்பவர் கல்லால் தாக்கி சுந்தராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது, இதுகுறித்து சுந்தர்ராஜ்  விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரமேஷ் குமாரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னதாக ரமேஷ்குமார் மீது ஏற்கனவே ஒரு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் காரணமாக,குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.