"விஷன் விக்சித் பாரத் திட்டம்" எனும் நிகழ்ச்சியின் வாயிலாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. மிதிலேஷ் குமார் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை, அஞ்சல் துறை என பல்வேறு துறைகளில் இருந்து ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது துறையின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கிக்கூறி அவற்றில் பயன்பெறாத நபர்கள் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும், இதில் பேசிய உத்திரப்பிரதேச மாநில எம்.பி. மிதிலேஷ் குமார்  மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை எளிய அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே  பிரதமர் நரேந்திர மோடியின் கனவு என்று கூறினார், இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு திட்டங்கள், சலுகைகள் குறித்து பேசினார். பின்னர் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்த திரைகாட்சி வாகனம் மக்கள் பார்வைக்காக கொண்டுவரப்பட்டது, ஆனால் மழையின் காரணமாக மத்திய அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்த முடியாமல் போனது. இந்நிகழ்வில் மாவட்டதலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள், மற்றும் மாவட்ட பொருளாளர் திரு K.K.R. கணேஷ் ,மாவட்ட செயலாளர்கள்,லிங்கராஜ், வீரமணி, ஆத்திராஜ், படர்ந்தபுளி ஊராட்சி மன்ற தலைவர் சோலைராஜ் மேலும் மத்திய அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.