விளாத்திகுளத்தில், இராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பில்,  சோழப்பேரரசர் மாமன்னர் இராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சோழப்பேரரசர் இராஜராஜ சோழனின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.   இந்நிகழ்ச்சியில் வாதிரியார் சமுதாய சங்கத் தலைவர் குணசேகரன் வாதிரியார், விளாத்திகுளம் வட்டார முக்குலத்தோர் சமுதாயத்தலைவர் சுப்பிரமணியத்தேவர், விளாத்திகுளம் பாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நலச்சங்க நிறுவனர் மாலினி நாச்சியார், தலைவர் மாரியம்மாள் நாச்சியார் உள்ளிட்ட ஏராளமான வாதிரியார் ராஜகுல மகளிர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு இராஜராஜ சோழனின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.