விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழை நிவாரண முகாம் ஏற்பாடு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக விளாத்திகுளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தும், சாலையில் பெருக்கெடுத்து ஓடியும் காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவின்படி திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி, விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியான 1-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ராஜூவ் நகர் மற்றும் கமலாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கட்ட பெரிதும் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டு விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழை வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் செந்தில்குமார் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும் விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்....