விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டிங் பீடி இலைகள் & சிகரெட்டை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீசார்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கல்லூரணி கடற்கரை பகுதியில் இருந்து கட்டிங் பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்படவிருப்பதாக தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல்நிலைக் காவலர் பழனி,  பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமான க்யூ பிரிவு போலீசார் அப்பகுதியில் நேற்றிரவு 12 மணியளவில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த TN 42 AD 9630 என்ற வாகனப் பதிவெண் கொண்ட BOLERO PICKUP லோடு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூடைகள் கட்டிங் பீடி இலைகளும், மான்ஸ்டர்(UK) சிகரெட் (1 லட்சத்து 20 ஆயிரம் எண்ணமும்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வாகனத்தில் இருந்த ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் (25), சிவபெருமாள் (28) ஆகிய இருவரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் இலங்கைக்கு கடப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டிங் பீடி இலைகள் மற்றும் மான்ஸ்டர் சிகரெட்டையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட பொட்டல் காட்டைச் சேர்ந்த வினித் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்...