ஆ தள்ளு தள்ளு தள்ளு! விளாத்திகுளம் அரசு பேருந்தின் அவலம்: பேருந்து கட்டணம் செலுத்தியும் நடுசாலையில் பேருந்தைத் தள்ளிய பயணிகளின் பரிதாப நிலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இன்று மதுரை சென்று திரும்பி விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை 11:25 மணி அளவில் ஜமீன்கோடாங்கிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதானதால், பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பழுதடைந்த பேருந்தை தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. முறையாக பேருந்து கட்டணம் செலுத்தியும் பயணிகள் பேருந்தை இறங்கி தள்ளுவது பரிதாபநிலை விளாத்திகுளம் பகுதியில் தொடர்கதையாகி வருகிறது.
விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது.
அதேபோல் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிரந்தரமாக பணியாற்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து விடுப்புகள் வழங்கப்படுவதும், அதற்குப் பதிலாக தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு அரசு பேருந்துகளை இயக்குவதால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் முறையாகப் பேருந்தை பராமரிக்காமல் நடுசாலையில் பேருந்துகள் பழுதாகி நிற்பது தொடர்கதையாக உள்ளது.
கடந்த 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு உள்ள டீ கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்...