மோடி அரசை கண்டித்து விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திராவிட முன்னேற்றக் கழக கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக வேட்பாளருமான மார்கண்டேயன் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் இளைஞர் அணி சின்னத்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.