17 வயது சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குக்கு நீதி கேட்டு தேசிய ஜனநாயக கூட்டணி  கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை (17)  வயது பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தற்போது மூன்று நாட்கள் ஆகிய நிலையில் குற்றவாளிகளை தற்போது வரை கைது செய்யாததை கண்டித்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக பாஜக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினர் “இந்த ஆட்சி ஆண்டது போதும் தமிழக மக்கள் மாண்டது போதும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதில் ஏராளமான தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, மாநில செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்டு ராஜா,சுயம்பு, சரவணன் சிவபெருமாள் பாஜக நிர்வாகிகள் கந்தசாமி, பெஞ்சமின் பாண்டியன்,லீலாவதி, புகழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.