புதுரில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக புதூர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி ஏற்பாட்டில்,தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் முன்னிலையில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் மத்திய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை சீர் குலைக்க முயலும் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில்,புதூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் விஜயக்குமார்,புதூர் நகரச் செயலாளர் ஆண்டி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியசக்தி இராமச்சந்திரன், பால்ராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பதி,அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி மோகன்,கரிசல் பூமி விவசாயம் சங்க தலைவர் வரதராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக, மத்திய அரசு "விக்சித் பாரத் ஜி ராம் ஜி" திட்டமாக மாற்றி 125 நாட்கள் வேலை வாய்ப்பினை உறுதி செய்து செயல்படுத்தி வரும் நிலையில், இதனை சீர்குலைக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து, திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியும், தற்போது மக்களிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வரும் திமுகவிற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இருப்பதால் விரைவில் திமுக வீட்டிற்கு அனுப்பவும் என தெரிவித்து அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.