விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குருவார்பட்டி,கோடாங்கிபட்டி, என்.வேடப்பட்டி, அச்சங்குளம், தாப்பாத்தி, பூதலாபுரம், மாதலாபுரம், கந்தசாமிபுரம்,புதூர் அதேபோல் வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான வெம்பூர், மேலக்கரந்தை, அயன்ராசாபட்டி, கைலாசபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 16-11-2024 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி மின்சார ஊரக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.