விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 203-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைப்பிற்குப்பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 40 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 203-வது வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்கு பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெளியே காத்திருந்து வருகின்றனர்.
மேலும் சோதனை வாக்குப்பதிவு காலை 6 மணி அளவில் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை சரி செய்தனர் இதனை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.