எட்டயபுரத்தில் மயிலிறகை வைத்து மந்திரித்து நூதன மோசடி 5 பேரை எச்சரித்து போலீசார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் இல்லத்துப் பிள்ளைமார் தெருவில், இஸ்லாமியர்கள் 5 பேர் மயிலிறகை வைத்து மந்திரித்து தோஷ நிவர்த்தி செய்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகளில் 500,1000, 15,000 வீதம் 5 பேர் நூதனமாக பணம் வசூலித்து சென்றனர் மேலும் அவர்கள்  காலையில் ஓடக்கடை பஜார், வடக்கு சேனையர் தெரு பகுதிகளில் தோஷ நிவர்த்தி செய்வதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் பண வசூலித்துக் கொண்டிருந்தனர் மேலும்  பணம் பறி கொடுத்தவர்கள் நூதனமான முறையில் பணத்தை வசூலித்ததை தொடர்ந்து எட்டயபுரம் போலீசில் புகார் செய்தனர், புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் தோஷ நிவர்த்தி செய்யும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் 5 பேரும் மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தோஷ நிவர்த்திக்காக வாங்கப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாதவராஜா எச்சரித்து அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.