விளாத்திகுளம் அருகே தாய் மகள் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் மூதாட்டி சீதாலட்சுமி (75) மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோர் இருவரும் கடந்த 02-03-2025-ம் தேதி வீட்டிற்குள் சடலமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து, கடந்த மூன்று நாட்களாக போலீசார் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியில் போன் கேமரா மற்றும் வாகன சோதனை மூலமாக தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்,இந்த நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையாபுரம் காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், உதவியாளர் முத்துராஜ் மற்றும் தலைமை காவல் ஆய்வாளர் ஜாய்சன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க முயன்ற போது,குற்றவாளியான முனீஸ்வரன் மற்றும் முத்து கண்ணன் ,வேல்முருகன் ஆகியோர் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி முனீஸ்வரன் முத்து கணேஷ் வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர், இதில் முனீஸ்வரனுக்கு குண்டு பாய்ந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது, இந்நிலையில் குற்றவாளிகளான முனீஸ்வரன்(25) முத்துகண்ணன் (25), வேல்முருகன்(19)மற்றும் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமை காய்வாளர் ஜாய்சன் உள்ளிட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.