விளாத்திகுளம் அருகே பலசரக்குக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ புகையிலை போலீசாரல் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பொன்னையாபுரம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த கனிராஜ் என்பவரின் மகன் அஜித் குமார் (26). இவர் மேலநம்பிபுரம் கிராமத்தில் பலசரக்கு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவரது கடையில் இன்று தூத்துக்குடி மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் அஜித் குமாரின் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 12 கிலோவை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான அஜித் குமாரை கைது செய்து எட்டையாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.