விளாத்திகுளத்தில் பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையம் தெரு பகுதி சாலை பகுதியில் இரண்டு தனியார் மருத்துவமனைகள், நூலகம்,தொடக்கப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது, மற்றும் இந்தசாலை முக்கியமான பிரதான சாலையாகும், இப்பகுதியில் அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள்,அரசு வாகனங்கள்,பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோருக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது, இதனை கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் அப்பகுதியில் " நோ பார்க்கிங் " அறிவிப்பு பலகை பல மாதங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டு இருந்தது, இதனையும் பெரிது படுத்தாமல் இப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்து இடையூறு செய்து வந்தனர்.
இந்நிலையில் " நோபார்க்கிங் " பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு விளாத்திகுளம் காவல்துறையினர் தலா ஒவ்வொரு வாகனத்திற்கும் 500 ரூபாய் விதம் அவதாரம் விதித்தனர்.