விளாத்திகுளம் அருகே பெண்ணை கூட்டி கொடுக்க சொன்னதால் மாற்றுத்திறனாளி ரவுடியை கொலைசெய்த நான்கு பேரை 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணன் (64), இவர் குறி சொல்வது, மாந்திரீக வேலை செய்வதாக கூறப்படுகிறது, இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் பொன்னுச்சாமி என்ற குமார்(42) மாற்றுத்திறனாளியான இவர் மீது மம்சாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. ஒற்றைக்கை உடைய பொன்னுச்சாமி என்ற குமார் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்,இவர் இரவு நேரங்களில் கோவில்களில் பூட்டை உடைத்து உண்டியில் திருடுவது, வீடுகளில் திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார், இந்நிலையில் நாகலாபுரம் பகுதிகளில் திருட வந்தபோது பொன்னுச்சாமி என்ற குமாருக்கும் கோடாங்கி என்ற கோபால கிருஷ்ணனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது, இதனை அடுத்து இருவரும் சந்தித்து அடிக்கடி மது அருந்துவது கஞ்சா புகைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் பொன்னுச்சாமி என்ற குமார் கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணனிடம் உன்னிடம் மாந்திரீகம் செய்வதற்கு நிறைய பெண்கள் வருகின்றனர்,அதில் ஒரு பெண்ணை எனக்கு ஆசைக்கு இணங்க அனுப்புமாறு கேட்டுள்ளார்.
பொன்னுச்சாமி என்ற குமாரிடம் உனக்கு பெண் தானே வேணும் வா என்று கூறி கடந்த 22-12- 2018 ஆம் ஆண்டு இரவு நாகலாபுரம் - சமத்துவபுரம் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணன் அழைத்துச் சென்றுள்ளார்,அங்கு கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணனின் நண்பர்களான கமுதியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (54), நாகலாபுரத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பவரின் மகன் ராஜராஜன் (36), நாகலாபுரத்தை சேர்ந்த இமானுவேல் என்பவரின் மகன் கருப்பசாமி (40) ஆகிய 5 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்து கொண்டிருந்தபோது, கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணன் நான் மாந்திரிகம் செய்து மரியாதையாக இருக்கிறேன் என்னை மாமா வேலை பார்க்க சொல்கிறாயா நீ என்று கூறி பொன்னுச்சாமி என்ற குமாரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் மிதித்துள்ளார், கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணனின் நண்பர்களான ராமகிருஷ்ணன், ராஜராஜன், கருப்பசாமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதில் பின்தலையில் காயம் அடைந்த பொன்னுச்சாமி என்ற குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து நாகலாபுரம் - சமத்துவபுரம் காட்டுப்பகுதியில் காலையில் 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டும் குற்றவாளிகளை பிடிப்பதில் உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் பின்னடைவை சந்தித்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தவழக்கு விசாரணையை தீவிர படுத்திய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இந்த வழக்கை புலனாய்வு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்என்று 2025 பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் விளாத்திகுளம் DSP அசோகன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம், நாலாட்டின்புதூர் உதவி ஆய்வாளர் செல்லத்துரை, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய தலைமைகாவலர் கார்த்திக்ராஜா, விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் சரவணகுமார், கோவில்பட்டி காவலர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த மூன்று மாதங்களாக சம்பந்தப்பட்ட முந்தைய சாட்சிகள், டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராயப்பட்டு கொலைக்கு பின் கிராமங்களை விட்டு சென்றவர்கள் யார் யார் என்பதை தனித்தனியாக கண்டறியப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில், கொலை நடந்த நாள் அன்று கொலை செய்யப்பட்டு உயிரிழந்த பொன்னுச்சாமி என்ற குமார், கோபாலகிருஷ்ணன் என்ற கோடாங்கி, கருப்பசாமி, ராஜராஜன், ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு பேருடைய செல்போன் சிக்னல் ஒரே இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து குற்றவாளிகளை நான்கு பேரையும் தனித்தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டதில், பொன்னுச்சாமி என்ற குமார் கோடாங்கி என்ற கோபாலகிருஷ்ணனை என்னை “ மாமா வேலை பாரக்க சொல்லி ” பெண்ணை கூட்டி கொடுக்க சொன்ன ஆத்திரத்தில் நான்கு பேரும்அடித்து கொலை செய்தோம் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து நான்கு பேரையும் கைது செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் பேராவூரணி சிறையில் அடைத்தனர்.
மேற்படி கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாகவும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.