விளாத்திகுளம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காமராஜர் நகரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,மரக்கன்றுகள் நடும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.