ஆக்கிரமிப்பு மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிகவினர் மனு!


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள புலிவாடுநாயக்கன்பட்டி  கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக(JSW) மாட்டு வண்டி பாதைகள் மற்றும் நீர் வழி ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து  இரட்டை மற்றும் ஒற்றை மின்கம்பங்களை நிறுவி உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் மாட்டு வண்டி பாதை மற்றும் நீர் வழி  ஓடை பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் தேமுதிகவினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.