மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் !
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டியில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் பயன்படுத்தும் மாயானத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் ஆக்கிரமிப்பினை அகற்ற வலியுறுத்தியும், மயானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டோர் எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தாசில்தார் சுபாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.