விளாத்திகுளத்தில் பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம் - விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை!
தமிழ்நாடு பேரூராட்சிகள் ஆணையரின் உத்தரவின்படி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுறுத்தலின்படி விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி கடைக்காரர்களுக்கும் பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு புகையில்லா போகி மற்றும் புகையில்லா பொங்கல் விழா குறித்து விளாத்திகுளம் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, விளாத்திகுளத்தில் பொது இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பழைய கழிவு பொருட்கள் போன்றவை சேகரிக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.