விளாத்திகுளம் அருகே PCR என்னும் ஆயுதம்: ஜாதி கலவரத்தை தூண்டும் காவல்துறை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம், இந்த கிராமத்தில்  SC,BC,MBC உள்ளிட்ட 6  வகுப்புகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில்  (28) வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அக்கிரமத்தில் கஞ்சா மற்றும் மது அருந்தி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரச்சனை செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு,  ஊர் பொது இடத்தில் அதிக பெண்கள் நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞன் தனது ஆடைகளை நீக்கி சிறுநீர் கழித்து  மனிதத் தன்மையற்ற செயலில் நடந்ததைக் கண்டித்து ,கிராம மக்கள்  காடல்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர், ஆனால் அந்த புகார் மீது  காடல்குடி காவல்துறையினர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, அதேபோல் கஞ்சா மட்டும் மது போதையில்  கிராமத்தில் இருப்பவர்களை பார்த்து ஆபாச வார்த்தைகளால் காதில் கேட்க முடியாத அளவிற்கு சத்தமாக பேசுவதும், தனியாக செல்லும் பெண்களைப் பார்த்தால் பாலியல் ரீதியான சைகை காட்டுவதையும் வழக்கமாக வைத்து வருகிறார்.

அதேபோல் 2024 இந்தாண்டு அந்தக் கிராமத்தில் உள்ள  ஒரு பார்வையற்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து குறித்து, அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞர் மீது ஆதாரத்துடன் காடல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகார் மீது  காடல்குடி காவல் நிலைய போலீசார்   "செவிடன் காதில் ஊதிய சங்கு போல்"   அந்த இளைஞருக்கு ஆதரவாக செயல்பட்டு  அந்த இளைஞர் மீது என்ன நடவடிக்கையை எடுக்காமல் இருந்தனர்.  இந்நிலையில் அந்தக் கிராமத்தில் உள்ள  பிள்ளையார் கோவிலின் சிலையை கற்களால் உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் சென்று கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அந்தப் புகார் மீதும் காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்காமல், "இன்று போய் நாளை வாருங்கள்,இன்று போய் நாளை வாருங்கள்" என்று  அலட்சியப்படுத்தி அழைக்களித்து வருகின்றனர். 

இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் கேட்ட பொழுது,அந்த இளைஞரை திட்டமிட்டு அந்த இளைஞரின் உறவினர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி, “PCR Act “  வழக்குப்பதிவு செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அந்த இளைஞரை மூலை சலவை செய்து குற்ற செயல்களில் ஈடுபடுத்தி தொடர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினிடம் கிராம மக்கள் கேட்டால், அந்த இளைஞர் மீது நீங்கள் புகார் கொடுத்தால், அந்த இளைஞரை வைத்து உங்கள் மீது நீங்கள் அந்த இளைஞரை சாதிய ரீதியாக  திட்டியதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நிலை ஏற்படும் என்று காவல்துறையினர் கூறுவதாக கூறப்படுகிறது.மேலும் அந்த இளைஞர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு  ஆபாசமான வார்த்தைகளால்  தொடர்ந்து திட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாருக்கும் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று கிராம மக்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள நினைத்தாலும், காவல்துறையினரும் மற்றும் அந்த இளைஞரும்,உறவினர்களும்  " PCR Act " என்னும் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அக்கிராமத்தில் ஜாதி ரீதியான கலவர பிரச்சனைகள் ஏற்படும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தொடர்ந்து அக்ராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி வரும் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கந்தசாமிபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.