விடுமுறையில் பெற்றோருடன் கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு!
பாடம் படிக்கவில்லை என்றால் மாணவர்களை செருப்பால் ஆசிரியர் அடிப்பதாக குற்றம்சாட்டும் பெற்றோர்கள்,திடீர் விடுமுறையில் சென்ற ஆசிரியர்:கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை – விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
இப்பிரச்சினை குறித்து அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ராதிகா கூறும் போது, பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்ற என்னுடைய குழந்தைகள் உள்பட 7 மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கடுமையாக தாக்கியுள்ளார், மேலும் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் செருப்பினை வைத்து மாணவர்களை அடித்துள்ளார். ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடை மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த பள்ளியில் நிரந்தரமாக தலைமை ஆசிரியர் இல்லை, இது குறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.