விளாத்திகுளத்தில் பனைத்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்-சிதம்பரம்நகர் பகுதியை சேர்ந்த காசி என்பவரின் மகன் ராஜா(37), இவர் பனையேறும் தொழில் செய்து வந்துள்ளார், இவரது மனைவி அந்தோணியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மனவிருத்தியில் வாழ்ந்து வந்த ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூக்கிட்டு உயிரிழந்த ராஜாவிற்கு 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.