மகா சிவராத்திரி முன்னிட்டு பிரசித்தி பெற்ற பார்வதி சமேத பவானிசுவரர் கோவிலில் நடைபெற்ற 4 கால பூஜையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குவிந்த பொதுமக்கள் சாமி தரிசனம்!



நாடு முழுவதும் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை சிறப்பு அபிஷேகத்துடன் வழிபாடு நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி சமேத பவானீஸ்வரர் கோயிவிலில் சிவனடியார்கள் பவானிசுவரருக்கு4 கால பூஜைகள் செய்து தேவாரம், திருவாசகங்கள்பாடி, பால்,தயிர் ,பஞ்சாமிர்தம், தேன்,நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி,விபூதி, , பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து மூலவருக்கு சுவாமிகளுக்கு யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் 108 சங்காலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அபிஷேகங்கள் செய்து, மலர்களால் நன்கு அலங்கரித்து, மகா தீபாதாரணை நடைபெற்றது ,இந்த கோவிலில் மகா சிவராத்திரி என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மேலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டையாபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்விடியவிடிய நடைபெற்ற மஹா சிவராத்திரி பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் வளாகத்தில் தங்கி இருந்து வழிபட்டனர்.

மகா சிவராத்திரி முன்னிட்டு,திருமுறை விண்ணப்ப இசைகச்சேரி நடைபெற்றுது.