விளாத்திகுளம் அருகே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாய காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,எட்டையாபுரம்,புதூர்,குளத்தூர்,வேம்பார், ஓட்டப்பிடாரம்,கயத்தார், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024-2025ம் பயிரிடப்பட்டிருந்த உளுந்து,பாசி,மக்காசோளம்,சின்ன வெங்காயம்,மிளகாய் உள்ளிட்டபயிர்கள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டன, அவ்வாறு பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கிராம நிர்வாக அலுவலர் களால் கணக்கெடுக்கப்பட்டு,பயிர் அடங்கல், வங்கிக் கணக்கு, விவரம் பெறப்பட்டு ஓராண்டாகியும் நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவை கண்டித்தும்.  


தேசிய நெடுஞ்சாலை மு.கோட்டூர் விலக்கில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க மக்கள் நலன் கருதி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரியும்.


விளை பொருட்கள் மக்கா, வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கொத்தமல்லி, வத்தல் போன்றவற்றுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 


கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாய பயிர்களை பெரும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு உயிர் பயத்தை கொடுத்து வரும் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டை முறையாக வழங்காமல் விவசாயிகளிடம் கொள்ளை இலாபம் அடையும் ஷேஸ்மா பயிர் காப்பீடு நிறுவனத்தை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.

மக்கள் நலன் கருதி இருக்கண்குடி அணைக்கட்டில் இருந்து வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.


தெற்கு முத்துலாபுரம் - மலைப்பட்டி, வடக்கு முத்துலாபுரம் - கருப்பூர், மு. கோட்டூர் - மேல நம்பிபுரம், தாப்பாத்தி - அயன் வடமலாபுரம் பழுதடைந்துள்ள சாலையை புதிய தார்ச்சாலை அமைக்கக் வேண்டும்.

முத்துலாபுரம் குறுவட்டம் சக்கிலிபட்டி, இனாம் அருனாசலபுரம், கீழ்நாட்டுக் குறிச்சி, அயன் ராஜா பட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி கிராமங்களில் உள்ள பட்டாசு தொழிற்சாலையின் அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.