"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் வேளாண்மை துறை சார்பில் விதைப்பைகள்,தார்ப்பாய் மற்றும் மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்கள் வழங்கிய எம்.எல்.ஏ!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலைக்காட்டுபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கழுகாசலபுரம்,ராமனூத்து,படர்ந்தபுளி,தலைக்காட்டுபுரம்,நீராவிபுதுப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ,வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலம் 46 அரசு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். இம்முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டு வேளாண்மை துறை சார்பில் விதைப்பைகள்,தார்ப்பாய் மற்றும் மருத்துவத் துறை சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கினார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் எட்டயபுரம் வட்டாட்சியர் சுதா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.