எட்டையபுரத்தில், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஓட்டுநராக வேலை செய்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செல்வக்குமார் நேற்றைய தினம் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த இளைஞர் செல்வக்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததை அறிந்த அவரின் பெற்றோர்கள் செல்வக்குமாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவருடைய உடல் உறுப்புகளை மதுரை அரசு மருத்துவமனையில் தானம் செய்தனர். இதைத்தொடர்ந்து நாளை (23.10.2024) மூளைச்சாவு அடைந்த செல்வக்குமாரின் உடல் எட்டையபுரம் நாவலக்கம்ப்பட்டி சாலையில் அமைந்துள்ள மயானத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், உடல் உறுப்புகள் தானம் செய்த எட்டையபுரம் இளைஞர் செல்வக்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது‌. இதில் செல்வக்குமாரின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டு உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞர் செல்வக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...