விளாத்திகுளம் தொகுதியில் ஓபிஎஸ் கூடாரம் காலியானது:ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓபிஎஸ் அணி மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


இந்த இணைப்பு விழாவானது  விளாத்திகுளம்  மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் நடைபெற்றது. இதன் மூலம், விளாத்திகுளம் தொகுதியில் ஓபிஎஸ் அணியின் அமைப்புகள் முற்றிலும் வலுவிழந்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் ஓபிஎஸ் அணி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி என்கிற ராஜகோபால், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, விளாத்திகுளம் நகர செயலாளர் கணேசன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் . இவர்களுடன், பல்வேறு கிளை மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

 மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., பேசுகையில் 

 “மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் திமுக அரசின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த இணைவு நடைபெறுகிறது. விளாத்திகுளம் தொகுதியில் திமுக மேலும் வலுப்பெறும்” எனத் தெரிவித்தார். மேலும், இணைந்த அனைவரையும் கட்சியின் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்.


இணைந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கருப்பூர் சீனி என்கிற ராஜகோபால் பேசுகையில்:-


தங்களது கருத்துக்களில், “மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் திமுக தலைமையின் செயல்பாடுகள் எங்களை ஈர்த்தன. தொகுதி வளர்ச்சிக்காகவும், சமூகநீதிக்காகவும் திமுகவில் இணைந்தோம்” எனக் கூறினர்.இந்த நிகழ்வின் மூலம், விளாத்திகுளம் தொகுதியில் திமுகவின் அரசியல் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும், எதிரணிகளுக்கு இது கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி,மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புதூர் பேரூர் கழக வார்டு உறுப்பினர் வெற்றிவேலன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.