விளாத்திகுளம் அருகே ரூ.13.16-லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக கடை திறப்பு !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.16-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக கடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.