விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா – மதுரை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்:ஒரே நாளில் 4 லச்சம் ரூபாய் க்கு மாடுகள் விற்பனை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைவளர்ப்பு என்பது மிகவும் முக்கிய தொழிலாளாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடு,மாடு, கோழி வளர்ப்பு அதிகமாக உள்ளது. எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இதனால் ஆடுகள் வளர்ப்போர் இந்த சந்தை மூலமாக ஆடுகளை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் மாட்டுச் சந்தை இப்பகுதியில் இல்லை என்பதால் திருநெல்வேலி மேலப்பாளையம் அல்லது மதுரைக்கு தான் செல்ல வேண்டிய நிலையில் மாடுகள் வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளனர்.
இந்த நிலையில் விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில் விளாத்திளகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முனியசக்தி ராமசந்திரன் ஏற்பாட்டின் பெயரில் தனியார் வார மாடடுச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் மாட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இந்த மாட்டுச்சந்தை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று மதுரை, திருப்புவனம், ராமநாதபுரம், சாயல்குடி, சீவலப்பேரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க ஆர்வமுடன் வந்து இருந்தனர். மாட்டுசந்தை திறந்த முதல் நாளிலேயே 4 லச்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது குறிப்பிடதக்கதாகும்...