விளாத்திகுளம் பேரூராட்சி டிராக்டர் மீது லாரி மோதியதில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஒருவர் காயம் மற்றொருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் இவர் ஒப்பந்த விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடன் விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் பணியாற்றி வருகிறார். இருவரும் இன்று விளாத்திகுளம் பேரூராட்சியில் பகுதியில் உள்ள குப்பைகள் டிராக்டரில் ஏற்றுக்கொண்டு வேம்பார் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்றுள்ளனர். அப்போது கேரளா மாநிலம் பரப்பனாங்கடியில் இருந்து சூரங்குடியில் உள்ள தனியார் கம்பெனிக்கு மீன் ஏற்றி வந்த லாரி டிராக்டரை முந்திச் செல்ல முற்படும்போது , டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்தில் மாரியம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார்,கார்த்திக் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த கார்த்திகை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த மாரியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் குடும்பத்திற்கும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.