விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் முத்துராமலிங்கம் (60) இவர் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார், அப்போது பட்டினமருதூர் - பாலார்பட்டி கிராமத்தைச்சேர்ந்த பட்டாணி என்பவரின் மகன் காசி (60) இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேப்பலோடையிலிருந்து பாலர்பட்டி செல்லும் பொழுது, ECR சாலையில் பாலர்பட்டி விளக்கில் திரும்ப முயற்சித்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த முத்துராமலிங்கம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காசி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த முத்துராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து முத்துராமலிங்கத்தின் உடலை கைப்பற்றிய தருவைகுளம் காவல் நிலைய போலீசார் பிரேத ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.