எட்டையாபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!





தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள T. சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ராஜேஷ்குமார் (34) இவர் கீழஈராலில் இருந்து எட்டையாபுரத்திற்கு தனது (Hero splendor+ ) ஸ்ப்ளெண்டர் + பைக் இருசக்கர வாகனத்தில் எட்டையாபுரம் சென்று கொண்டிருந்தபோது,  செமபதூர் கிராமத்தைச் சேர்ந்த உமையணன் என்பவரின் மகன் சண்முகையா (80), என்பவர் தனது XL இருசக்கர வாகனத்தில் மேலஈரால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வாட்டர் கேனில் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது, சண்முகையா ஒட்டி வந்த இருசக்கர வாகனமும் ராஜேஷ்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் சண்முகையா கொண்டு வந்த இரண்டு லிட்டர் தரையில் கொட்டி உடனடியாக தீப்பிடித்தில்,90% தீக்காயங்களுடன் சண்முகையா உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டும், சிகிச்சை பலனின்றி சண்முகையா பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஷ்குமாருக்கு லேசான காயங்களுடன் தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.